
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு சீசன்களில் இந்தப் பொறுப்பில் இருந்த முனாப் படேலுக்குப் பதிலாக இவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள இவரது அனுபவம் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தும்.