
சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் சர்வதேச தரத்திலான ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்பட்டு, பார்முலா 1 முதல் 4 வரையிலான கார் பந்தயங்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.