
மத்திய மற்றும் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டுதல்களில் திருத்தங்கள் செய்ய தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்ட மாணவர்களைத் தகுதித் தேர்வுகளில் எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு முடித்த உடனேயே ஆசிரியர்ப் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்படிப்பு தற்போது நாடு முழுவதும் 409 உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது.