நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் அடைந்துள்ளார்.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட உள்ளதால் அவர் தொடரிலிருந்து விலகுகிறார்.