/nakkheeran/media/media_files/2026/09/16/thirumaprema-2026-09-16-15-40-21.jpg)
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் திமுகவின் இறுக்கமான அணுகுமுறையால்தான் கூட்டணி உடைந்தது என்றும், விசிக வெளியேறியதற்கு 100 சதவீதம் திமுகதான் காரணம் என்றும் தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிகவினர் அமைச்சரவை பதவிக்காகவே வேறு கூட்டணிக்குச் சென்றுள்ளதாகவும், இதுவே உண்மை என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக தங்களுக்கு இரண்டு சீட்டுகள் அதிகமாகக் கொடுத்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொண்டுவிட்டுப் பின்னர் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது தவறான செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.