
சுதந்திர தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவைக்கு 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17-ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் நிலையில், அன்று முதல் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடங்குகின்றன.
முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, இயற்கை சீற்றங்கள் துயர் தணிப்பு மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான விவாதங்கள் நடைபெறும்.