
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 2010 முதல் 2025 வரை 38 பேரைக் கொன்று அவர்களின் உடல்களைச் சாப்பிட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி மூஹூசி கைனெருகாபா அறிவித்துள்ளார்.
மசாகா, இபாண்டா, காசோ ஆகிய பகுதிகளில் இந்தக் கொலைகள் நடந்ததாகவும், சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவை நீதிமன்ற தீர்ப்பு அல்ல என்றும் சந்தேக நபராகவே கருதப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.