/nakkheeran/media/media_files/2026/10/20/siru-2026-10-20-22-03-51.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 16ஆம் தேதி காணாமல் போன 8 வயது சிறுமி சென்னை ரயில்வே நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் ஸ்ரீபெரும்புதூரிலும் தந்தை ஹைதராபாத்திலும் வசித்து வரும் நிலையில், தாய் ஜார்க்கண்ட் சென்றதால் அவரைப் பார்ப்பதற்காக சிறுமி தனியாக ரயில்வே நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
வடமொழியில் பேசியதால் சிறுமியை ரயில்வே போலீசார் அரசு காப்பகத்தில் பாதுகாத்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர தேடுதலுக்குப் பிறகு அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.