
சென்னையில் இன்று திங்கட்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாகன எரிபொருட்களுடன் சேர்த்து இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.