
கிருஷ்ணா நீருக்காக ஆந்திர முதல்வரிடம் பேசும் தமிழக முதல்வர் விஜய் காவிரி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் வழங்காமல் மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் இதுகுறித்து பேசினாரா என்றும், கூட்டணி நலனுக்காக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பலிகொடுக்கப்படுகிறதா என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.