
டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
போராட்டங்களை நடத்துவதற்காக ராம்லீலா மைதானம், புராடி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகிய மூன்று புதிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.