
தனது புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி AI தொழில்நுட்பம் மூலம் போலி விளம்பரங்களுக்குப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மோசடியால் ஏற்பட்ட நற்பெயர் மற்றும் வணிக மதிப்பு பாதிப்பிற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்களும் ஏற்கனவே இது போன்ற போலி விளம்பரங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.