
சென்னை விமான நிலையத்தில் நாப்கின் வழங்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததால், நடிகை லதா ராவ் கடும் சிரமத்திற்கு ஆளானார்.
தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த வசதி நிறுத்தப்பட்டதாகவும், விரைவில் 36 புதிய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் கழிப்பறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.