
புதிய ஐபோன் மாடல்களின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனை மந்தமாகியுள்ள நிலையில், ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் உதிரிப்பாகங்களுக்கான உற்பத்தியை குறைக்குமாறு ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்டோபர் மாதத்திற்கான உதிரிப்பாக ஆர்டர்களை ஆப்பிள் நிறுவனம் திட்டமிடப்பட்ட அளவைவிட 15 முதல் 20 சதவீதம் வரை குறைத்துள்ளதாக நிக்கேய் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஏஐ டேட்டா சென்டர்களுக்கு மெமரி சிப்கள் அதிகளவில் தேவைப்படுவதால் ரேம் விலை உயர்ந்துள்ளதும், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.