
பிக்பாஸ் 10-வது சீசன் வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதத்திற்குப் பதிலாக செப்டம்பர் 6-ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் ஒரே கட்டமாகத் தொடங்குகிறது.
நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், ஓவியா, ராஜு மற்றும் மாயா ஆகியோர் சாமானிய போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்களாகச் செயல்பட உள்ளனர்.
ஜனனி அசோக், பரீனா மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்களான டாலி, கேபிஒய் சரத், கேபிஒய் ராமர் ஆகியோர் போட்டியாளர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.