
அமெரிக்காவில் நடைபெற்று வரும் செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரின் ரேபிட் பிரிவில், சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
ரேபிட் பிரிவின் 9-வது மற்றும் கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா 28-வது நகர்த்தலில் நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் தோல்வியடைந்தார்.
உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 10 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ள நிலையில், அடுத்ததாக 18 சுற்றுகள் கொண்ட பிளிட்ஸ் போட்டிகள் நடக்கவுள்ளன.