
திண்டுக்கல்லில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரின் 7-வது லீக் போட்டியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களைக் குவித்தது.
கோவை அணியின் பாலசுப்ரமணியன் 84 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 87 ரன்களும் எடுத்து அசத்தினர்; மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை பாந்தர்ஸ் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளையும், சரவணன் மற்றும் பெரியசாமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி கோவை அணியின் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்த முயன்றனர்.