
அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது என திமுக எம்பி கனிமொழி சோமு கூறிய கருத்து, தவெக ஆட்சி அமைத்துள்ள தமிழகத்தில் திமுக-பாஜக கூட்டணி குறித்த புதிய யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் ஆகஸ்ட் 8-ல் கூட்டிய எம்பிக்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்த நிலையில், கனிமொழி சோமுவின் கருத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
கூட்டம் கூட்டினால் யார் வருவார்கள் என்ற புரிதல் இல்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் அது என கனிமொழி சோமு பதிலடி கொடுத்துள்ளதோடு, தமிழகத்திற்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்பதே திமுக கொள்கை என்றார்.