
தலைமைச் செயலகம் முன் போராடிய விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் நடவடிக்கையை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.