
அமெரிக்காவில் வணிகம் மற்றும் சுற்றுலா விசா பெற்று, பின்னர் தஞ்சம் கோரிய சுமார் 2,00,000 வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
2016 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் B1 மற்றும் B2 விசாக்களில் நுழைந்து தஞ்சம் கோரியவர்கள் இந்த நடவடிக்கையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசா ரத்து நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே கட்டமாக இத்தனை பேரின் விசாக்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.