
கனடாவைச் சேர்ந்த 69 வயது முதியவர் மார்க் ஹெர்பஸ்ட், புற்றுநோயால் காலமான தனது மனைவியின் நினைவாக 25 நாடுகளில் 30,000 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தொடங்கி 324 நாட்கள் தொடர்ச்சியாகப் பயணித்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் பயணத்தின் மூலம் டொராண்டோவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்காக இந்திய மதிப்பில் ரூ.46 லட்சத்திற்கும் அதிகமான நிதியை அவர் திரட்டியுள்ளார்.