
சென்னையில் ரோந்து வாகனத்தை ஓட்டியபடி செல்போனில் பேசிய காவலர் ஜானகிராமனுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
இந்த புகாரை வீடியோவாக பதிவு செய்து அளித்த சமூக ஆர்வலர் நவீன்குமாருக்கு, ஹெல்மெட் அணியாத பழைய வழக்கு தொடர்பாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பழிவாங்கும் நடவடிக்கையாக அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காவல் ஆணையர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.