
சந்தீப் கிஷன் நடிப்பில் யுகேந்தர் முனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'கரிகாலா' என்று பெயரிடப்பட்டு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இரண்டு பாகங்களாகத் தயாராகும் இந்தப் படத்தை ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர்.
புராணம், கற்பனை மற்றும் சாகசம் கலந்த இப்படம் தனது திரைப்பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் என நடிகர் சந்தீப் கிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.