
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என மாநகராட்சி நிர்வாகம் தவறான தகவலை அரசுக்கு அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
தவறான மதிப்பீட்டால் முப்பத்தி மூன்று துறைகள் மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து 6,500 போலீஸார் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களைக் கொண்டு கடுமையான பாதுகாப்புகளை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளால் உள்ளூர் பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் முழுமையாக பங்கேற்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.