
துபாயில் நடைபெறும் ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 8 மணிக்கு ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.
தாய்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் தாய்லாந்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஹாங்காங் அணி, இந்த ஆட்டத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிக்கும்.