
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களில் கணக்கு தொடங்குவதைத் தடை செய்யும் தனிநபர் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா முன்மொழிந்துள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், விதிகளை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இத்தகைய வயது கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும் கட்சி வேறுபாடின்றி பல எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.