
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மலப்புரம் பாணக்காடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவால் மலப்புரம் - வேங்கரை சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக கொல்லத்தில் இருந்து 14 மீனவப் படகுகள் மற்றும் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வி.டி. சதீசன் மீட்புப் பணிகளை ஆய்வு செய்துள்ள நிலையில், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.