
மேற்கு ஆசிய அரசியல் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய ரூபாய் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 94.84 ஆக நிலைபெற்றது.
சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.45 சதவீதம் உயர்ந்து 99 டாலரை நெருங்கியது ரூபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு குறைந்தபட்சமாக ரூ. 94.89 வரை சென்றது.