International
பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: புதிய கட்டுப்பாடுகள் அமல்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: புதிய கட்டுப்பாடுகள் அமல்

Hindu Tamil Thisai43m
THE BRIEF
1

கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்து அமைச்சரவைப் பிரிவு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2

கடைகள் இரவு 9 மணிக்கும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் அடைக்கப்பட வேண்டும் எனவும், திருமணங்களில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3

அரசுத் துறைகளில் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களின் எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு, அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.