
இஸ்ரோ தனது ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இந்தியாவின் முதல் சக்தி வாய்ந்த இ.ஓ.எஸ்.-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
2,368 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், 36,000 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, 7 ஆண்டுகள் வரை இந்தியாவைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியைச் செய்யும்.
முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இரவு பகல் பாராமல் நிகழ்நேரத்தில் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.