Indian Politics
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

Dinamalar1h
THE BRIEF
1

சகோதரரைத் தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று நேரில் ஆஜரானார்.

2

2022 ஆகஸ்ட் 8-ம் தேதி தனது அண்ணன் மரிய குளோத் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

3

இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் தரப்பில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.