ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது புதிய X1 லாங்-வீல்பேஸ் (LWB) மாடலை இந்திய சந்தையில் ₹49.90 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பெட்ரோல் எஸ்யூவி மாடல் முந்தைய மாடல்களை விட கூடுதல் இடவசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் இந்த புதிய காரின் முன்பதிவு ஆகஸ்ட் 21 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.