
மாற்றுத்திறனாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்களை வாங்குவதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆணையிட்டுள்ளார்.
விளையாட்டு செயற்கை உறுப்பு மற்றும் மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை அவயம் போன்ற உபகரணங்களை வாங்குவதற்கு அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.30,000 நிதியுதவியாக வழங்கப்படும்.
பயனாளர்கள் தங்களது தேவையின் அடிப்படையில் இந்த மேம்பட்ட புதிய உபகரணங்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய இந்த ஆணை வழிவகை செய்கிறது.