
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சரண்ஷ் ஜெயின், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
54 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சரண்ஷ் ஜெயின், 2,223 ரன்கள் மற்றும் 188 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அனுபவத்துடன் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இதே தொடரில் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ள ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அகிப் நபி, இந்த ஆண்டில் மட்டும் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய திறமையுடன் அணியில் இடம் பெற்றுள்ளார்.