கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'டோரதி' திரைப்படம் நேற்று (செப்டம்பர் 25) வெளியானது.
பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது என்ற கருப்பொருளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்குத் திரையுலகிலிருந்து ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், கலவையான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சினிமா மொழி மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆகியவை தன்னை வியக்க வைத்துள்ளதாகவும், அவர் மீது தனக்கு பொறாமை இருப்பதாகவும் இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.