
டெல்லி-என்சிஆர் பகுதியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் குடியிருப்பு வீடுகளின் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் முன்னணி ஏழு நகரங்களுடன் ஒப்பிடும்போது இதுவே அதிகபட்ச விலை உயர்வாகக் கருதப்படும் நிலையில், சராசரி விலை ஒரு சதுர அடிக்கு ரூ.8,900-லிருந்து ரூ.9,980 ஆக உயர்ந்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பிரீமியம் வீடுகளுக்குக் கட்டட நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிப்பது இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.