/nakkheeran/media/media_files/2026/09/30/newd-2026-09-30-11-17-21.jpg)
கடந்த 6 மாதங்களாகப் பயன்படுத்தப்படாத ரேஷன் அட்டைகளை அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.58 கோடி ரேஷன் அட்டைகள் தற்காலிகமாக முடக்கப்படவுள்ளன.
முடக்கப்பட்ட அட்டைகளை மீண்டும் செயல்படுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் பயனாளிகள் இ-கேஒய்சி செய்யாவிட்டால் அட்டை நிரந்தரமாக நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.