
துபாயில் நடைபெற்று வரும் மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியா அணிகள் இன்று மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்தோனேசியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், வங்காளதேச அணி தனது இன்னிங்ஸை தொடங்குகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.