
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் நேற்று முன்தினம் காலை 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஹெர்ரா மாகாணத்தின் பிடலோசா அரிபா பகுதிக்கு அருகே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தேவாலயம் மற்றும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
பனாமா, கொலம்பியா, ஈக்வெடார், நிகரகுவா, குவாதமாலா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.