
கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி முன்னேறியுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோ - நாதானியல் லேமான்ஸ் ஜோடியை எதிர்த்து யூகி பாம்ப்ரி மற்றும் ரியான் செகர்மேன் ஜோடி மோதியது.
முதல் செட்டை இழந்த போதிலும், சுதாரித்துக்கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்தடுத்த செட்களை 7-6 (7-5), 10-6 எனைக் கைப்பற்றி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.