
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன.
பனாமாவின் தெற்கு கடலோரப் பகுதியான ஹெர்ரேரா மாகாணத்தின் லா பிடலோசா அருகே, பூமிக்கு அடியில் சுமார் 12.6 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் கொண்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டது.