
இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவான 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நிலையில், படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
தன் மகள் சினிமாவில் அறிமுகமானது குறித்து மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.