
டொரண்டோவில் நடைபெறும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் சீனாவின் ஷான் ஜுன்செங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
சீன வீரர் ஷான் ஜுன்செங் 7-5, 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் முன்னணி வீரரான ரூப்லெவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் சிட்சிபாஸ், கேமரூன் நூரி மற்றும் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.