சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் திருவாதவூர், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மற்றும் வாலாஜா ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
உள் தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்பட வாய்ப்புள்ளது.