
ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் தன்மய் பலோடா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அவரது சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை சரிந்து முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆரம்பத்தில் வேகப் பந்துவீச்சாளராக இருந்து பின்னர் சுழற்பந்து வீச்சாளராக மாறிய தன்மய் பலோடா, தனது அறிமுகப் போட்டியிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.