
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டில், பெண்களின் திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் சைக்கிள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் மொத்த வருவாய் 3.50 லட்சம் கோடி ரூபாயாகவும், செலவு 4.05 லட்சம் கோடி ரூபாயாகவும், வருவாய் பற்றாக்குறை 55,775 கோடி ரூபாயாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீடு 7 லட்சம் ரூபாயாகவும், குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு 12 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.