
மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், அங்குள்ள விடுதிகளை இடிக்கவும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வனப்பகுதியில் இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ள நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் பட்டா வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.