
ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்த ரூ.3,900 கோடி முதலீட்டுத் தொகையை முறைகேடாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதால் ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக எல்.ஐ.சி. நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அனில் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.