
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த இரு வாலிபர்கள் ரகசிய கேமரா பொருத்திய கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்தபோது, கோவிலை ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.
மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.