
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்குச் சான்றிதழுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.